ஜனநாயகன்

தளபதி



பிரம்மாண்டமாக நடக்கப்போகும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா? - Related Image

விஜய்

யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.



பிரம்மாண்டமாக நடக்கப்போகும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா? - Related Image

விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஹெச். வினோத், இது விஜய் ரசிகர்களுக்கு செம மாஸான கமர்ஷியல் படமாக, விருந்தாக அமையும் என கூறியிருந்தார். இதன்பின் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துவிட்டது.

என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், ஆனால் நான்.. கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

இசை வெளியீட்டு விழா

வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் புத்ராஜெயா எனும் நகரத்தில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இப்படியொரு இசை வெளியீட்டு விழாவை பார்த்திருக்கவே முடியாது என்ற அளவுக்கு, மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.