பைசன்

இளம் ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ளபைசன்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



பைசன் படம் உலகளவில் 5 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் லால், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்தாலும், ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள்.

வசூல்

இந்நிலையில், பைசன் படம் உலகளவில் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பைசன் படம் உலகளவில் ரூ. 37+ கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.