

தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்டவராக உலா வருகிறார்.

தனுஷ் - அனிருத் கூட்டணிக்கென்று சினிமாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அனிருத், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றது.
நடிகை கயாடு லோஹர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?.. கலக்குகிறாரே!
தனுஷ் - அனிருத் காம்போ
இதன் பின், இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது, ஒரு அதிரடியான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தனுஷ், 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தனுஷ் - அனிருத் கூட்டணி இணைவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Source: Entertainment News