செந்தில்

80ஸ் காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். இவர் 1979ல் வெளிவந்த பசி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.



நகைச்சுவை நடிகர் செந்தில் மகன் காதலுக்காக செய்த மாபெரும் விஷயம்.. என்ன? - Related Image

தமிழ் நன்றாக பேசுவது எப்படி?.. காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி ஓபன் டாக்!

இதன்பின் பல படங்களில் நடித்து வந்த செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை தமிழக மக்கள் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளது.

குழந்தைகள் முன்னேற்ற கழகம், வாங்கனா வணக்கங்கனா, அகத்தியா, லால் சலாம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். செந்திலுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

மாபெரும் விஷயம்

இதில், மூத்த மகனான மணிகண்ட பிரபு, மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இவர் தந்தையுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆனால் அதன்பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. மணிகண்ட பிரபு, ஜனனி என்ற பல் மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.

மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க, காதலுக்காக நடிப்பை தூக்கியெறிந்துவிட்டு டாக்டராகிவிட்டாராம்.