Dude

கடந்த வாரம் தமிழில் இருந்து வெளிவந்த திரைப்படங்களில் ஒன்றுDude. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



Dude மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், மூன்று நாட்களில் Dude திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்

அதன்படி, Dude படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என கூறப்படுகிறது.

அப்படி நடந்தால், பிரதீப்பின் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களை தொடர்ந்து, ரூ. 100 கோடி வசூல் செய்த படங்களின் வரிசையில் Dude இணையும்.

மேலும் தனது முதல் மூன்று திரைப்படங்களிலேயே, தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற சாதனையையும் பிரதீப் ரங்கநாதன் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.