எதிர்நீச்சல் தொடர்கிறது

ஒரு திருமணம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடந்து வருகிறது.



தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ - Related Image

தர்ஷனுக்கு குணசேகரன் நினைத்தது போல் திருமணம் நடக்குமா அல்லது ஈஸ்வரி ஆசை போல் நடக்குமா என்பது தான் விறுவிறுப்பின் உச்சமாக செல்கிறது.

கடந்த வாரம் எபிசோடில் ஒரு உயிரிழப்பு நடந்துவிட்டது, அதாவது வீடியோ வைத்து மிரட்டிய நபரை கொலை செய்துவிட்டார் அறிவக்கரசி. இன்னொரு பக்கம் ஜனனி, ஜீவானந்தம், பார்கவியை கொலை செய்ய குணசேகரன் அடியாட்கள் ஏற்பாடு செய்ய தற்போது அந்த 3 பேரும் தப்பித்துவிட்டார்கள்.

அடுத்து என்ன நடக்கும், தர்ஷன் திருமணம் எப்படி நடக்கும் என்பது தான் பெரிய கேள்வியே.

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி, நந்தினி, ரேணுகா 3 பேரும் தர்ஷனை அழைத்துக் கொண்டு தப்பிக்கும் போது குணசேகரன் மற்றும் அவரது குழுவினர் பார்த்துவிடுகின்றனர்.

கோபத்தில் குணசேகரன் தர்ஷனை சரமாரியாக அடிக்கிறார். பின் சக்தியிடம் நீ உண்மையான ஆம்பளையா இருந்தா திருமணத்தை தடுத்துப்பார் என சவால் விடுகிறார்.

அடியாட்களிடம் இருந்து தப்பித்த ஜனனி மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியது போல் தெரிகிறது. இதோ இன்றைய எபிசோட் பரபரப்பு புரொமோ,