OG

தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம்



இரண்டு நாட்களில் OG படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

OG

. இயக்குநர் சுஜித் இயக்கிய இப்படத்தில் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

இவருடன் இணைந்து பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், ராவ் ரமேஷ், ஸ்ரீயா ரெட்டி என பலரும் நடித்திருந்தனர். பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

உதவி செய்வது குறித்து வந்த குற்றச்சாட்டுக்கள், KPY பாலா கொடுத்த பதிலடி

வசூல்

இந்த நிலையில், இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பவன் கல்யாணின் OG படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 188 கோடி வசூல் செய்துள்ளது.

முதல் நாள் மட்டுமே ரூ. 150+ கோடி வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் இப்படம் சரிவை சந்தித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.