Dude

கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த Dude படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.



100 கோடியை கடந்து வசூலை அள்ளும் Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

குறிப்பாக இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். 5 நாட்களில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது திரைப்படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்

இந்த நிலையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் Dude படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 12 நாட்களில் ரூ. 109 கோடி வசூல் செய்துள்ளது.