பைசன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 17ஆம் தேதி வெளிவந்தபைசன்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



பைசன் படம் உலகளவில் 10 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா.. - Related Image

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரின் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருகிறது. மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில், கபடி வீரராக துருவ் விக்ரம் பட்டையை கிளப்பி இருந்தார்.

மேலும் இப்படத்தில் பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்

திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் பைசன் படம் இதுவரை உலகளவில் 10 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 10 நாட்களில் உலகளவில் பைசன் படம் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.