



கொடி - காஷ்மோரா
தீபாவளி பண்டிகைக்கு வெளிவரும் திரைப்படங்கள் என்றாலே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

அதுவும் முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படி 2016ஆம் ஆண்டுதீபாவளிபண்டிகைக்கு வெளிவந்த திரைப்படங்கள்தான் தனுஷின் கொடி மற்றும் கார்த்தியின் காஷ்மோரா.
இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016ல் வெளிவந்த இப்படம் தற்போது 9 ஆண்டுகளை கடந்துள்ளது.

வசூல்
இந்த நிலையில், இப்படங்களின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் கொடி திரைப்படம் உலகளவில் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி மற்றும் கார்த்தியின் காஷ்மோரா ரூ. 60 கோடி முதல் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது.
Source: Entertainment News