பைசன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் காளமாடன் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடித்திருந்தார்.



2 நாட்களில் உலகளவில் பைசன் படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? - Related Image

இவருடன் இணைந்து பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் பார்ப்போம். அந்த வகையில்,பைசன்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பைசன் படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 12+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.