சோக செய்தி

பிரபலங்கள் பற்றி சந்தோஷ செய்தி வந்தால் ரசிகர்கள் அளவே இல்லாமல் கொண்டாடி சந்தோஷப்படுவார்கள்.



தமிழ் சினிமாவில் இன்று வந்த 2 பிரபலங்களின் உயிரிழப்பு செய்தி... - Related Image

ஆனால் அதேசமயம் துக்க செய்தி வந்தால் ரசிகர்களும் கஷ்டப்படுவார்கள். தற்போது ஒரே நாளில் 2 துக்க செய்திகள் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் பெண்கள் லிஸ்ட் எடுத்தால் முதலில் அனைவருக்கும் நியாபகம் வருபவர் மனோரமா ஆச்சி.

அவரின் ஒரே மகன் பூபதி கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வர இன்று உயிரிழந்துள்ளார். அவர் குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதேபோல் தமிழ் சினிமாவின் கானா கிங்காக கொண்டாடப்படுபவர் தேவா. இவரது சகோதரர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இவர் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் கலக்கி வந்தார்.