ராஜமௌலி

நான் ஈ, பாகுபலி 1&2 மற்றும்



இந்திய சினிமாவின் பெருமை... இயக்குநர் ராஜமௌலியின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா - Related Image

RRR

படங்களின் மூலம் உலகளவில் இந்திய சினிமாவை கொண்டு சென்றவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி.

இவர் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் எனும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இன்று இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் SSMB29 படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இதுவரை தலைப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை எமி ஜாக்சனா இது, உடல்எடை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ

பிறந்தநாள் - சொத்து மதிப்பு

இன்று இயக்குநர் ராஜமௌலி அவர்களின் பிறந்தநாள். தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என கூறப்படுகிறது.