பைசன்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பைசன்.



பைசன் படம் குறித்து மணிரத்னம் சொன்னது என்ன?.. மாரி செல்வராஜ் உருக்கம்! - Related Image

இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் என பலரும் நடித்திருந்தனர்.

கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பைசன் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

சொன்னது என்ன?

அந்த வகையில் தமிழ் சினிமாவின் லெஜண்டரி இயக்குநர் மணிரத்னம், பைசன் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.

அதில், " பைசன் படத்தைப் பார்த்தேன், உங்கள் படத்தைப் பார்த்து பெருமைப்படுகிறேன், எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது, மாரி செல்வராஜ் தான் உண்மையான பைசன்" என தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ்

அவரது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.