ஆண்பாவம் பொல்லாதது

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்ரியோராஜ். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் இன்று ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜோ படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.



ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. தலைப்பில் இருந்தே இப்படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் மாளவிகா மனோஜ், விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல்

வசூல்

நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் மட்டுமே இப்படம் உலகளவில் ரூ. 70+ லட்சம் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.