
பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலம் என எல்லோருக்கும் தெரியும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட மேலும் பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தமிழில் தற்போது பிக் பாஸ் 9ம் சீசன் நடந்து வருகிறது. இதில் தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகர் அமித் பார்கவ் வர இருக்கிறார்.
பிக் பாஸ் குரல்
அமித் பார்கவ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால் அவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரராக இருந்திருக்கிறார். தமிழ் பிக் பாஸில் இல்லை.. கன்னடத்தில்.
அவர் சில வருடங்கள் கன்னட பிக் பாஸின் குரலாக இருந்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தமிழ் பிக் பாஸில் போட்டியாளராக வருவதால், அவர் எப்படி விளையாட போகிறார் என்பதை பார்க்கலாம்.
Source: Entertainment News