பைசன்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம்பைசன்.



பைசன் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்நிலையில், 11 நாட்களில் பைசன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 11 நாட்களில் இப்படம் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது.