பைசன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.



பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. உலகளவில் இதுவரை எவ்வளவு தெரியுமா - Related Image

இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்

பைசன்

. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

ப்ரீ புக்கிங்

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகளவில் தொடங்கியுள்ளது.

இதில் இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் உலகளவில் இப்படம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளது. முதல் நாள் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.