பைசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் படத்திற்கு திரையரங்கில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த துருவ் விக்ரமின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.



திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் பைசன் படத்தின் வசூல் விவரம்.. இவ்வளவு கோடியா? - Related Image

மேலும் பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா என அனைவரின் நடிப்பிற்கும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இவர்களை தாண்டி படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

வசூல்

அதே போல் படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் பைசன் படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பைசன் படம் உலகளவில் இதுவரை ரூ. 49 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் பைசன் படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.