பைசன்

முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம்பைசன்.



பைசன் படம் மூன்று நாட்களில் உலகளவில் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

அதில் முக்கியமான அரசியலும் பேசியுள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.

வசூல்

மூன்று நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள பைசன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பைசன் படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.