பைசன்

துருவ் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பைசன் காளமாடன்.



பைசன் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும்? வெளிவந்த பாக்ஸ் ஆபிஸ் தகவல் - Related Image

இப்படத்தில்அனுபமாபரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால் என பலரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. கண்டிப்பாக அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வசூல்

இந்த நிலையில், இன்று உலகளவில் வெளிவந்துள்ள பைசன் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 5 முதல் ரூ. 7 கோடி வசூல் செய்யலாம் என கூறப்படுகிறது.