அஜித்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய சிலரில் முக்கியமானவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி மாபெரும் வெற்றிபெற்றது.



மகள், மகன் குறித்து பேசும்போது கண்கலங்கிய அஜித்.. காரணம் என்ன தெரியுமா? - Related Image

இதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில், ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

கண்கலங்கிய அஜித்

நடிகர் அஜித் சமீபத்தில் பிரபல Youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது கார் ரேஸ், சினிமா, அரசியல் போன்ற பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து வெளிப்படையாக அஜித் பேசியிருந்தார். அதில் தனது மகள் மற்றும் மகன் குறித்து பேசும்போது சற்று லேசாக கண்கலங்கினார்.

இதில், "என் மகள், மகனுடன் பள்ளிக்கு அல்லது வேறு இடங்களுக்கு செல்லும்போது, அவர்கள் நான் ஏன் மற்ற அப்பாக்களை போல் இல்லை என அழுது கேட்கிறார்கள். அதை சொல்லும்போது அவர் சற்று கலங்கியது அனைவரின் மனதை நெருடியது.