


இட்லி கடை
முன்னணி நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த

இட்லி
கடை படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மனதை தொடும் வகையில் இப்படத்தின் கதைக்களத்தை தனுஷ் உருவாக்கி இருந்தார்.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், ராஜ்கிரண், பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இட்லி கடை படம் இதுவரை 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
நடிகர் அஜித்தின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ
வசூல்
இந்த நிலையில், 9 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இட்லி கடை இதுவரை உலகளவில் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News