Dude

தமிழ் சினிமாவில் முதலில் இயக்குநராக அறிமுகமாகி, பின் தன்னை தானே இயக்கி ஹீரோவாக நடித்து, இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.



வசூலை வாரிக்குவிக்கும் Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட், இதோ - Related Image

இவர் நடிப்பில் கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்தDudeதிரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சர்ச்சையில் சிக்கினாலும், இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வசூல்

இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் Dude திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, Dude படம் இதுவரை உலகளவில் ரூ. 107.9 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.