Dude

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்Dude.



Dude இரண்டு நாட்களில் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தை அறிமுக இயக்குநரான கீர்த்திஸ்வரன் இயக்க, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் Dude திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே பெரும்பான்மையான விமர்சனமாக இருக்கிறது.

வசூல்

ஆனாலும் இரண்டு நாட்களில் மாபெரும் வசூலை Dude திரைப்படம் செய்துள்ளது. ஆம், இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் Dude திரைப்படம் உலகளவில் ரூ. 40 கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.