வேதாளம், தூங்காவனம்

தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த நடிகரின் ரசிகர்கள் அப்படத்தை திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதுவே முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.



2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம், தூங்காவனம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ - Related Image

அப்படி இரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது. ஆம், நடிகர் அஜித் குமாரின் வேதாளம் மற்றும்கமல்ஹாசனின் தூங்காவனம். இந்த இரு படங்களும் 2015ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இன்றுடன் இந்த இரண்டு படங்களும் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வரும் நிலையில், இப்படங்களின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜித்தின் வேதாளம் படம் உலகளவில் ரூ. 125+ கோடி வசூல் செய்தது. மேலும் கமல் ஹாசனின் தூங்காவனம் ரூ. 40+ கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.