தேரே இஷ்க் மே

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த இட்லி கடை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.



2 நாட்களில் தேரே இஷ்க் மே படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

ஆனால், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 28ஆம் தேதி திரைக்கு வந்த படம்தான் தேரே இஷ்க் மே.

இந்தியில் வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து க்ரித்தி சனோன் நடித்திருந்தார். இயக்குநர் ஆனந்த் எல். ராய் இப்படத்தை இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல்

இந்த நிலையில், தேரே இஷ்க் மே படம் உலகளவில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது.