மாஸ்க்

தமிழ் சினிமாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளிவந்த படம் மாஸ்க். இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருந்தார்.



கவினின் மாஸ்க் படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் வில்லியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். மேலும் சார்லி, பவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வசூல்

இந்த நிலையில், இரண்டு நாட்களில் மாஸ்க் படம் உலகளவில் செய்துள்ளவசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவினின் மாஸ்க் படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 3.8 கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சுமாரான வரவேற்பாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.