ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் அமைந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.



ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. யார்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - Related Image

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் என பலரும் நடித்திருந்தனர்.

உலகளவில் ரூ. 620+ கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

அதிர்ச்சி தகவல்!

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே 'ஜெயிலர் 2' படத்தில் தெலுங்கு திரையுலகின் ஆக்ஷன் மன்னன் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பாலகிருஷ்ணா நிராகரித்து விட்டாராம்.