ஆரோமலே

அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகி கடந்த 7ஆம் தேதி வெளிவந்த படம்ஆரோமலே. சாரங் தியாகு பிரபல நடிகர் தியாகுவின் மகன் ஆவார்.



2 நாட்களில் உலகளவில் ஆரோமலே படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்

அதன்படி, ஆரோமலே படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.9 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக பிக்கப் ஆகியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் குவியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.