ஆரோமலே

அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ் ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ஆரோமலே.



3 நாட்களில் ஆரோமலே படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்

இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஆரோமலே படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மூன்று நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.