மிடில் கிளாஸ்

திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் முனீஷ்காந்த்.



3 நாட்களில் உலகளவில் மிடில் கிளாஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இவர் கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மிடில்கிளாஸ். யதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை கிஷோர் எம். ராமலிங்கம் இயக்கியிருந்தார்.

மேலும் விஜயலக்ஷ்மி, காளி வெங்கட், மௌலி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல்

இந்த நிலையில், 3 நாட்களில் மிடில் கிளாஸ் படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது.