ஆண்பாவம் பொல்லாதது

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த படங்களில் ஒன்றுஆண்பாவம்பொல்லாதது. ரியோ ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் இயக்கியிருந்தார்.



ஆண்பாவம் பொல்லாதது 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

ஜோ படத்தில் ரியோ ராஜ் உடன் இணைந்து நடித்திருந்த நடிகை மாளவிகா மனோஜ், இப்படத்தில் இரண்டாவது முறையாக ரியோவுடன் கைகோர்த்திருந்தார். மேலும் விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல்

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் இதுவரை உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 5.1 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது.