காந்தா

இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்காந்தா. இப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.



7 நாட்களில் காந்தா படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

மேலும், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 1950களில் இருந்த தமிழ் சினிமாவை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருந்தனர்.

படத்தில் நடித்தவர்களின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல்

இந்த நிலையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் காந்தா படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது.

இது எதிர்பார்த்ததை விட மிக குறைவான வசூல் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.