ஷாலினி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தற்போதும் புகழின் உச்சியில் தான் வலம் வருகிறார்.



அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினி சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? - Related Image

தமிழில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பெற்றார். அதை தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.

1999ம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்து அதன் மூலம் காதல் ஏற்பட இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஷாலினி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

அப்படி டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 50 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும்.