மாஸ்க்

லிப்ட் மற்றும் டாடா படங்களின் மூலம் ரசிகர்களிடையே ஹீரோவாக நல்ல வரவேற்பை பெற்றார் கவின். இதன்பின் ஸ்டார், பிளடி பெக்கர் மற்றும் கிஸ், ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.



மூன்று நாட்களில் மாஸ்க் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இதனால் மாஸ்க் படத்தில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவான மாஸ்க் படத்தில் கவின், ஆண்ட்ரியா முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மாஸ்க் படம், உலகளவில் ரூ. 6+ கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.