ஜனநாயகன்

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகிவிட்டது.



ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட் - Related Image

தளபதி கச்சேரி என்கிற தலைப்பில் வெளிவந்த இப்பாடலுக்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதுவரை youtube-ல் இந்த பாடல் 58 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

முதல் பாடலை தொடர்ந்து வருகிற டிசம்பர் 5 அல்லது 8ஆம் தேதியில் இரண்டாவது பாடல் வெளியாகும் என தகவல் தெவிக்கின்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 27ஆம் தேதிஜனநாயகன்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறுகிறது.

டிரைலர்

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் டிரைலர் குறித்து செம மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. வருகிற 2026 ஜனவரி 1ஆம் தேதி வெளியாகிறது என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு, சில நாட்களில் டிரைலர் வெளியாகிறது.