ரிவால்வர் ரீட்டா

ஜே. கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 28ஆம் தேதி வெளியாகியுள்ள படம்ரிவால்வர்ரீட்டா.



கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

வசூல்

இந்த நிலையில், 2 நாட்களில் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 1.3 கோடி வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என கூறப்படுகிறது.