ரீ ரிலீஸ்

கடந்த 28ஆம் தேதி இரண்டு மிகப்பெரிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித்தின்அட்டகாசம்மற்றும் சூர்யாவின் அஞ்சான்.



ரீ ரிலீஸான அஞ்சான், அட்டகாசம் படத்தின் வசூல் விவரம்.. இதோ - Related Image

[N4912T

]

இதில் அட்டகாசம் படம் அப்படியே ரீ ரிலீஸ் ஆகியிருந்தாலும், சூர்யாவின் அஞ்சான் படம் ரீ எடிட் செய்யப்பட்டு, புதிதாக வெர்ஷனில் ரிலீஸாகியிருந்தது.

இந்த ரீ எடிட் செய்யப்பட்ட அஞ்சான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில், அஞ்சான் மற்றும் அட்டகாசம் ஆகிய இரண்டு படங்களும் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அஞ்சான் திரைப்படம் உலகளவில் ரூ. 40 லட்சமும், அட்டகாசம் திரைப்படம் ரூ. 60 லட்சமும் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.