பைசன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம்பைசன்காளமாடன்.



பைசன் படம் இதுவரை உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர், என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

வசூல்

முதல் நாளில் இருந்து பைசன் படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.