காந்தா

துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்த படம் காந்தா.



உலகளவில் காந்தா படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி, ராணா டகுபதி ஆகியோர் நடித்திருந்தனர். 1950களில் இருந்த தமிழ் சினிமாவை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

காந்தா திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

வசூல்

அந்த வகையில் 8 நாட்களை இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 33 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 11 கோடியும் வசூல் செய்துள்ளது.