DC

கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகராக களமிறங்கியுள்ளார். கைதி 2 படத்தை அவரிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் ஹீரோவாக களமிறங்கியுள்ளது அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது.



முகம் முழுவதும் ரத்தத்துடன் நடந்து வந்த லோகேஷ்.. DC படத்தில் இணைந்த கமல் பட நடிகை - Related Image

DC என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். வாமிகா கேபி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தில் இருந்து அறிவிப்பு வீடியோ வெளிவந்தது.

படத்தில் இணைந்த நடிகை

இந்த வீடியோவில் முகம் முழுவதும் ரத்தத்துடன்லோகேஷ்கனகராஜ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சஞ்சனா, கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.