அவதார்

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி 2009ல் வெளிவந்த படம்அவதார்முதல் பாகம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகள் உழைப்பிற்கு பின் கடந்த 2022ஆம் ஆண்டு அவதார் இரண்டாம் பாகம் வெளியானது.



10 நாட்களில் அவதார் 3 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

முதல் பாகத்தை போலவே இப்படத்திற்கும் உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்தது. உலகளவில் அதிக வசூல் செய்த படமாக நம்பர் 1 இடத்தில் அவதார் முதல் பாகம் உள்ளது என்றால், 3ஆம் இடத்தில் அவதார் இரண்டாம் பாகம் உள்ளது.

அவதார் 3

இப்படி பல சாதனைகளை படைத்த அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே பலருடைய விமர்சனமாக இருந்தது.

வசூல்

இந்த நிலையில், அவதார் 3 படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவதார் 3 திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் 700 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இப்படம் ரூ. 6300 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.