ரெட்ட தல

தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பிக்கையான நட்சத்திரமாக பார்க்கப்படுபவர்களில் ஒருவர் அருண்விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ட தல.



3 நாட்களில் அருண் விஜய்யின் ரெட்ட தல படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.. - Related Image

இப்படத்தை இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் மான் கராத்தே, கெத்து ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையான பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூலில் சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், 3 நாட்களில் ரெட்ட தல படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் 1.8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.