விக்ரம் பிரபு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த இருகப்பற்று, டாணாக்காரன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதை தொட்டது.



7 நாட்களில் சிறை படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம்தான் சிறை. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தார்.

சிறை

இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகை அனிஷ்மா அனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 நாட்களை கடந்திருக்கும் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறை உலகளவில் 7 நாட்களில் ரூ. 6+ கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது.