அட்டகாசம்

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அட்டகாசம். இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.



அட்டகாசம் ரீ ரிலீஸில் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் பூஜா, ரமேஷ் கண்ணா, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்தனர்.

கடந்த வாரம் ரீ ரிலீஸான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியது.

வசூல்

இந்த நிலையில், ரீ ரிலீஸான அட்டகாசம் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளது.