இயக்குநர் சிவா

கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு சிறுத்தை சிவா என்கிற பெயர் வந்தது.



உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன இயக்குநர் சிறுத்தை சிவா.. புகைப்படத்தை பாருங்க - Related Image

இதன்பின் அஜித்துடன் கூட்டணி அமைத்த இயக்குநர் சிவா, 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என நான்கு திரைப்படங்களை இயக்கினார். இதை தொடர்ந்து இவர் இயக்க 'அண்ணாத்த' மற்றும் 'கங்குவா' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக இவர் அஜித் அல்லது விஜய் சேதுபதியை இயக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டுள்ள நிலையில், அங்கு இயக்குநர் சிறுத்தை சிவா சென்றிருக்கிறார்.

உடல் எடை குறைப்பு

அப்போது ரசிகர் ஒருவருடன் சிவா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் இயக்குநர் சிவா. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க: