கொம்புசீவி

சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம்தான் கொம்புசீவி.



கொம்புசீவி படத்தின் வசூல் விவரம்.. இதுவரை இவ்வளவு தானா? - Related Image

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்பொன்ராம்இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த கொம்புசீவி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

வசூல்

இந்த நிலையில் இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 2.1 கோடி வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.