

மம்மூட்டி
50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் பயணித்து வரும் நடிகர்களில் ஒருவர்மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் இவர் நடித்த டர்போ, காதல் தி கோர், பிரமயுகம், பீஷ்ம பர்வம் போன்ற படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

இந்த வயதில் இவ்வளவு நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, இளம் நடிகர்களுக்கே சவால் விடுகிறாரே என பலரும் கூறினர்.
களம்காவல் வசூல்
அந்த வரிசையில் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்து வெளிவந்த திரைப்படம்தான் களம்காவல். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தை ஜிதின் கே. ஜோஸ் இயக்கியிருந்தார். விநாயகன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் களம்காவல் படத்தின் மூன்று நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 44 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும்.
Source: Entertainment News