தேரே இஷ்க் மே

தனுஷ், க்ரீத்தி சனோன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தேரே இஷ்க் மே. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.



அமோக வரவேற்பை பெற்று வரும் தேரே இஷ்க் மே.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ - Related Image

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் கலவையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

வசூல்

முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், ஐந்து நாட்களில் தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 93 கோடி என கூறப்படுகிறது.

இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்போம் இறுதி வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.